Enter your Email Address to subscribe to our newsletters

சிவகாசி, 14 ஜூன் (ஹி.ச.)
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
அப்புகாரின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படையினர், சம்பவத்தில் தொடர்புடைய குள்ளமணி (வயது 26), செண்பக பாண்டி (வயது 25) மற்றும் மகேந்திரன் (வயது 27) ஆகிய மூவரையும் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மூவர் மீதும் உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுமக்கள் இதுபோன்ற சம்பவங்கள் குறித்து தயக்கமின்றி உடனடியாக புகார் அளிக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b