Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர், 15 ஜூன் (ஹி.ச.)
திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே உள்ள அத்திங்காவனூரைச் சேர்ந்த விவசாயி கோபால் என்பவரது வீட்டில் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து நுழைந்த மர்ம நபர்கள், வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.
பீரோவில் வைக்கப்பட்டிருந்த 60 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இன்று காலை வீடு திரும்பிய கோபால், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக் கிடந்ததைக் கண்டு கோபால் அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக வெங்கல் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தடயங்களை சேகரித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே நாளில் சுமார் ரூ.50 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள நகை, பணம் கொள்ளை போனது அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொள்ளையர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b