Enter your Email Address to subscribe to our newsletters

செங்கல்பட்டு, 15 ஜூன் (ஹி.ச.)
நடிகரும், தவெக தலைவரும், தற்போதைய தமிழக முதல்வருமான விஜய்யின் மனைவி சங்கீதா, விவாகரத்து கேட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
அதில் விஜய் மீது பல்வேறு அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
அதாவது விஜய்க்கு வேறொரு நடிகையுடன் திருமணத்தை மீறிய தொடர்பு இருப்பதாகவும் அதை நிறுத்த சொல்லி பேச்சுவார்த்தை நடந்த போதிலும் அவர் நடிகையுடனான தொடர்பை கைவிடவில்லை என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இவ்வழக்கு செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் இந்த இன்று விசாரணைக்கு வந்தது.
விஜய் மற்றும் சங்கீதா இருவரும் பொதுவெளியில் நன்கு அறியப்பட்ட பிரபலங்கள் என்பதால், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் ஏற்படும் சிரமங்களை கருத்தில் கொண்டு, காணொளி காட்சி மூலமாக ஆஜராக அனுமதி கோரி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வீடியோ கான்பரன்சிங் விசாரணை இல்லை என கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.
மேலும் வழக்கை விசாரித்த நீதிபதி, அடுத்த கட்ட விசாரணையை ஆகஸ்ட் 7-ஆம் தேதி நடத்த உத்தரவிட்டு ஒத்திவைத்தார்.
இந்த மனு மீதான முடிவு அடுத்த விசாரணையின்போது எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b