Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 ஜூன் (ஹி.ச.)
அரசியலில் நேரடியாக ஈடுபடாதவர்களையும், அதிமுக பொதுச்செயலாளரின் குடும்பத்தினரையும் தொடர்ந்து அரசியல் விவாதங்களுக்குள் இழுக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில செயலாளர் ராஜ் சத்யன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வாழ்த்து குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையை தெரிவித்திருப்பதாவது,
சமூக வலைதளங்கள், பத்திரிகைகள் மற்றும் ஊடக விவாதங்கள் வரை விரிவடைந்து, அதிமுகவுக்கு எதிரான ஒரு கருத்தோட்டத்தை உருவாக்கும் முயற்சியாக மாறியிருப்பது வேதனைக்குரியது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு, அதனைத் தொடர்ந்து கட்சிக்குள் நடைபெற்ற நிகழ்வுகள், கட்சித் தொண்டர்களின் உழைப்பை குறைத்து மதிப்பிடும் விமர்சனங்கள் உள்ளிட்ட பல்வேறு சவால்களை அதிமுகவின் தொண்டர்களும் அடுத்த தலைமுறையினரும் எதிர்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இத்தகைய சூழலிலும், அரசியலுடன் தொடர்பில்லாத நபர்களை தேவையின்றி அரசியல் விவாதங்களில் இழுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், இதுபோன்ற பேச்சுகள் எங்கு நடைபெற்றிருந்தாலும் அது தவறானதே என்றும் ராஜ் சத்யன் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ