அதிமுகவில் சிவி சண்முகம் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி – அக்ரி கிருஷ்ணமூர்த்தி குற்றச்சாட்டு
திருவண்ணாமலை, 15 ஜூன் (ஹி.ச.) திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக கலசப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வும், கழக கொறடாவுமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அதிமுக குறித்து தவறான கருத்துகளை தெரிவித்து கட்சிக்குள் குழப்பத
அக்ரி


திருவண்ணாமலை, 15 ஜூன் (ஹி.ச.)

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக கலசப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வும், கழக கொறடாவுமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி,

அதிமுக குறித்து தவறான கருத்துகளை தெரிவித்து கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த C. V. சண்முகம் முயற்சித்து வருவதாக குற்றம்சாட்டினார்.

சிவி சண்முகம், அதிமுக தொண்டர்கள் குண்டு குண்டாக மாற்றுக் கட்சிகளுக்கு சென்று வருவதாக கூறியிருப்பது முற்றிலும் தவறானது என்றும், உண்மையான அதிமுக தொண்டர்கள் யாரும் கட்சியை விட்டு விலகவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

எம்.ஜி.ஆர். உருவாக்கிய அதிமுக, திமுக என்ற தீய சக்தியை எதிர்த்து தொடங்கப்பட்ட இயக்கம் என்றும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி உறுதியாக செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.

மேலும், 2021 முதல் 2026 வரை தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்பட்டு, திமுக அரசின் தவறுகளை மக்களிடம் தொடர்ந்து எடுத்துரைத்தவர் என்றும் அவர் பாராட்டினார்.

அதிமுக தலைமையோ, நிர்வாகிகளோ, தொண்டர்களோ எந்த நிலையிலும் திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டதில்லை என்றும், திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க அதிமுக முயன்றதாக சிவி சண்முகம் கூறுவது உண்மைக்கு புறம்பானது என்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

சிவி சண்முகம் தனது கருத்துகளை மறுபரிசீலனை செய்து, அதிமுகவின் நிலைப்பாட்டை சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P