Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பதி , 15 ஜூன் (ஹி.ச.)
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உலகப்புகழ் பெற்ற ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், மத்திய இணை மந்திரி எல்.முருகன் மற்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் திருப்பதிக்கு சென்றிருந்தனர்.
அவர்கள் இன்று ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
கோவிலுக்கு வருகை தந்த அவர்களை கோவில் நிர்வாக அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து, கோவில் மரபின்படி அவர்களுக்கு தீர்த்தம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
சாமி தரிசனத்தை முடித்த பின்னர், எல்.முருகன் மற்றும் நயினார் நாகேந்திரன் கோவில் வளாகத்தில் சிறிது நேரம் இருந்துவிட்டு புறப்பட்டுச் சென்றனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA