கும்மிடிப்பூண்டி சிறுமி உயிரிழப்பு,பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்
திருவள்ளூர், 15 ஜூன் (ஹி.ச.) திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை அருகே வசித்து வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த மூன்றரை வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அன்புமணி


திருவள்ளூர், 15 ஜூன் (ஹி.ச.)

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை அருகே வசித்து வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த மூன்றரை வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அன்புமணி ராமதாஸ் குழந்தையை இழந்து வாடும் பெற்றோருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த ஆண்டு கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தை நினைவுகூர்ந்து, அதுபோன்ற கொடூரங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க வேண்டிய பொறுப்பில் காவல்துறையும் அரசும் தோல்வியடைந்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் பயன்பாடு மற்றும் நடமாட்டமே பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பல்வேறு குற்றங்களுக்கு காரணமாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை கிடைப்பதை அரசும் காவல்துறையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam