கும்மிடிப்பூண்டி சிறுமி உயிரிழப்பு ,சட்டம்-ஒழுங்கை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை, 15 ஜூன் (ஹி.ச.) கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர்,
உதயநிதி


சென்னை, 15 ஜூன் (ஹி.ச.)

கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர்,

இச்சம்பவத்தில் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை காவல்துறை விரைந்து கண்டறிந்து, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை மோசமடைந்து வருவதாக குற்றம்சாட்டிய அவர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

பல்வேறு பகுதிகளில் நடைபெற்றதாக கூறப்படும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை சுட்டிக்காட்டிய அவர், அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்றும் விமர்சித்துள்ளார்.

சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட முதலமைச்சர் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், மாநிலம் முழுவதும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி, குற்றங்களைத் தடுப்பதற்கான கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் தொடர்ந்தால் மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடவும் திமுக தயங்காது எனவும் உதயநிதி ஸ்டாலின் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P