Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 ஜூன் (ஹி.ச.)
சென்னை மாநகரில் உள்ள அனைத்து தெரு மின்விளக்குகளும் முழுமையாக, அதாவது 100 சதவீதம் செயல்படுகின்றனவா என்பதை உறுதிசெய்ய இன்று மாநகராட்சி சார்பில் விரிவான கள ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
மாநகராட்சிக்கு உட்பட்ட 1 முதல் 15 வரையிலான மண்டலங்களில், வார்டு வாரியாக மண்டல அலுவலர்கள் நேரடியாக களத்திற்குச் சென்று இந்த ஆய்வை நடத்த உள்ளனர்.
ஒவ்வொரு வார்டிலும் உள்ள தெரு மின்விளக்குகளின் நிலை, எரியாத விளக்குகள், பழுதடைந்த மின்கம்பங்கள் ஆகியவை குறித்து முழுமையாக கணக்கெடுக்கப்படும்.
இரவு நேர பாதுகாப்பை உறுதி செய்யவும், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத போக்குவரத்தை ஏற்படுத்தவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், தெரு மின்விளக்குகள் எரியாமல் இருப்பது, மின்னுவது அல்லது வேறு ஏதேனும் குறைபாடுகள் காணப்பட்டால், பொதுமக்கள் உடனடியாக 1913 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் எனவும் மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
பெறப்படும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு, விரைந்து சரிசெய்யப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b