Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 ஜூன் (ஹி.ச.)
சென்னையில் இன்று
(ஜூன் 15) ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்திருப்பது நகை வாங்கத் திட்டமிட்டுள்ள பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய நிலவரப்படி,
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.13,860 ஆகவும், ஒரு சவரன் (8 கிராம்) தங்கம் ரூ.480 உயர்ந்து ரூ.1,10,880 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.270-க்கு விற்பனையாகிறது.
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் முதலீட்டாளர்களின் தேவை அதிகரிப்பு ஆகியவை உள்நாட்டு சந்தையிலும் எதிரொலித்து விலை உயர்வுக்கு காரணமாக இருப்பதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து விலை உயர்வு காணப்படுவதால், நகை வாங்குபவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் சந்தை நிலவரத்தை கவனமாக கண்காணித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P