ஜவ்வாதுமலை பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை யானை - வனத்துறையினர் கண்காணிப்பு
திருவண்ணாமலை, 15 ஜூன் (ஹி.ச.) திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட ஜவ்வாதுமலை பகுதியில் 15 வருடங்களுக்கு முன்பு ஆந்திராவில் இருந்து வந்த 8 யானைகள் கூட்டமாக வந்தது, அதனைத் தொடர்ந்து இந்த யானை கூட்டத்தை மயக்க ஊசி போட்டு பிடித்து முத
Elephant


திருவண்ணாமலை, 15 ஜூன் (ஹி.ச.)

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட ஜவ்வாதுமலை பகுதியில் 15 வருடங்களுக்கு முன்பு ஆந்திராவில் இருந்து வந்த 8 யானைகள் கூட்டமாக வந்தது, அதனைத் தொடர்ந்து இந்த யானை கூட்டத்தை மயக்க ஊசி போட்டு பிடித்து முதுமலைகாட்டிற்கு கொண்டு சென்று விட்டனர்.

இதில் ஒரே ஒரு ஆண் யானை மட்டும் தனியாக பிரிந்து விட்டது, இந்த யானை நேற்று இரவு ஜமுனாமரத்தூர் பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதி மற்றும் திருப்பத்தூர் அருகே உள்ள ஆலங்காயம் வனப்பகுதிகளில் கிடைக்கும் தண்ணீர் மற்றும் உணவை சாப்பிட்டு விட்டு யாருக்கும் தொல்லை கொடுக்காமல் நடமாடி வருகிறது.

இந்த யானை கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜமுனாமரத்தூர் வனப்பகுதிக்கு வந்தது, அங்குள்ள விளை நிலத்தில் இருக்கும் பலா பழத்தை தின்றுவிட்டு அருகில் செக்டேமில் இருக்கும் தண்ணீரை குடித்து பொது மக்களுக்கு எந்தவித தொந்தரவும் செய்யாமல் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் ஜமுனாமரத்தூரில் இருந்து ஆலங்காயம் செல்லும் சாலையில் அந்த ஒற்றை யானை நடந்து சென்றுள்ளது, யாருக்கும் எந்தவித தொந்தரவும் செய்யாமல் சாலையில் நடந்து சென்றது.

யானைக்கு எந்தவித அச்சுறுத்தலும் ஏற்படுத்தாத வகையில் சாலையில் சென்ற வாகன ஓட்டிகளும் தங்களது வாகனங்களின் முகப்பு விளக்குகளை அனைத்து யானை வனப்பகுதிக்குள் செல்லும் வரையிலும், சாலையை விட்டு ஒதுங்கி செல்லும் வரையிலும் வாகன ஓட்டிகள் மெல்ல ஊர்ந்து சென்று அங்கிருந்து புறப்பட்டு சென்றனர், தொடர்ந்து அதன் நடமாட்டத்தை கண்காணித்து வருவதாக ஜமுனாமரத்தூர் வனத்துறையினர் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN