கே.ஆர்.பி. அணை நீர்மட்டம் ஒரே நாளில் 29 கன அடி உயர்வு
கிருஷ்ணகிரி, 15 ஜூன் (ஹி.ச.) கிருஷ்ணகிரி மாவட்டம் தென்பெண்ணை ஆற்று நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கே ஆர் பி அணைக்கு நீர்வரத்து நேற்று 611 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று 640 கன அடியாக அதிகரித்து உள்ளது. நீர் வரத்து மேலு
KRP Dam


கிருஷ்ணகிரி, 15 ஜூன் (ஹி.ச.)

கிருஷ்ணகிரி மாவட்டம் தென்பெண்ணை ஆற்று நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கே ஆர் பி அணைக்கு நீர்வரத்து நேற்று 611 கன அடியாக இருந்தது.

இந்த நிலையில் இன்று 640 கன அடியாக அதிகரித்து உள்ளது. நீர் வரத்து மேலும் உயரக்கூடும் என்பதால் அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் நீர் திறப்பு படிப்படியாக உயர்த்தவும் வாய்ப்பு உள்ளது.

அணையின் முழு கொள்ளளவான 52 அடியில் தற்போது அணையின் நீர்மட்டம் 50. 15 அடியாக அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

தற்போது அணைக்கு நீர்வரத்து 640 கன அடியாகவும் அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் நீர் திறப்பு 578 கன அடியாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் தென்பெண்ணை ஆற்று கரையோர வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பாதுகாப்பான இடத்திற்கு செல்லவும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN