தென்காசியில் நண்பர்கள் மோதலில் ஒருவர் அடித்துக் கொலை - தலைமறைவான குற்றவாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு
தென்காசி, 15 ஜூன் (ஹி.ச.) தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் என்பவரும் அவரது நண்பர்களும் ஒன்றாக அமர்ந்து நேற்று மாலை மது அருந்திக்கொண்டிருந்தபோது, அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில், முரு
Man beaten to death


தென்காசி, 15 ஜூன் (ஹி.ச.)

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் என்பவரும் அவரது நண்பர்களும் ஒன்றாக அமர்ந்து நேற்று மாலை மது அருந்திக்கொண்டிருந்தபோது, அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில், முருகன் உள்ளிட்ட சிலர் சேர்ந்து ஒருவரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கொலை சம்பவத்திற்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்ட முருகனும் உடனிருந்தவர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், உயிரிழந்தவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

மது போதையில் ஏற்பட்ட சிறு தகராறு கொலையில் முடிந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதற்கட்ட விசாரணை நடைபெற்று வருவதாகவும், விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Hindusthan Samachar / vidya.b