மயிலம் அருகே ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் கடத்தி வரப்பட்ட 16 கிலோ கஞ்சா பறிமுதல்
விழுப்புரம், 15 ஜூன் (ஹி.ச.) ஓடிசாவில் இருந்து ரயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்து விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே விற்பனை செய்யப்படுவதாக விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாய் பிரணீத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து விழுப்புரம
Mayilam police station


விழுப்புரம், 15 ஜூன் (ஹி.ச.)

ஓடிசாவில் இருந்து ரயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்து விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே விற்பனை செய்யப்படுவதாக விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாய் பிரணீத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாய் பிரணீத் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார், மயிலம், கூட்டேரிப்பட்டு உள்ளிட்ட இடங்களில் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கூட்டேரிப்பட்டில் உள்ள மயிலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் டிராவல் பேக்குடன் நின்றிருந்த இளைஞரிடம் தனிப்படை போலீசார் விசாரித்தனர்.

அப்போது அந்த இளைஞர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகமடைந்த தனிப்படை போலீசார், அந்த இளைஞர் வைத்திருந்த டிராவல் பேக்கை திறந்த பார்த்த போது அதில் 8 பண்டல்களில் 16 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து அந்த இளைஞரை, மயிலம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அந்த இளைஞர் சென்னை சவுக்கார்பேட்டையைச் சேர்ந்த ராஜசேகர் என்பதும் ஒடிசாவிற்கு சென்று அங்கிருந்து கஞ்சாவை வாங்கி ரயில் மூலம் கடத்தி கொண்டு வந்து விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் விற்பனை செய்து வருவதும் தெரிய வந்தது.

இதனையடுத்து மயிலம் போலீசார் வழக்குப்பதிந்து இளைஞர் ராஜசேகரை கைது செய்து 16 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN