தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாடு, 15 ஜூன் (ஹி.ச.) தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெ
மழை


தமிழ்நாடு, 15 ஜூன் (ஹி.ச.)

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்டுள்ள முன்னறிவிப்பின்படி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மேலும், தமிழகத்தின் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் தென் மாவட்டங்களில் மழை தீவிரமாக இருக்கும் என்றும், சில இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கும் மழை நீடிக்கும் சூழல் காணப்படுவதால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P