முஸ்லீம் இடஒதுக்கீட்டை உயர்த்தும் கோரிக்கையை தவெக அரசு தெளிவுபடுத்த வேண்டும் - நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
சென்னை, 15 ஜூன் (ஹி.ச.) முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீட்டை தற்போதைய 3.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் முன்வைத்துள்ள கோரிக்கை குறித்து தவெக அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்ற
Nainar


Nj


சென்னை, 15 ஜூன் (ஹி.ச.)

முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீட்டை தற்போதைய 3.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் முன்வைத்துள்ள கோரிக்கை குறித்து தவெக அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், தமிழகத்தில் ஏற்கனவே முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்டுள்ள 3.5 சதவீத இடஒதுக்கீட்டால் பிற்படுத்தப்பட்ட இந்து சமூகத்தைச் சேர்ந்த சிலர் தங்களுக்குரிய பிரதிநிதித்துவத்தை இழந்து வருவதாகக் கூறியுள்ளார்.

மேலும், முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீட்டை மேலும் அதிகரிப்பது பிற்படுத்தப்பட்ட இந்து மக்களின் பிரதிநிதித்துவத்தை மேலும் குறைக்கும் என்றும், மத அடிப்படையிலான இடஒதுக்கீடு அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை கொள்கைகளுக்கு முரணானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீட்டை விரிவுபடுத்தும் கோரிக்கையை பரிசீலிப்பதே தவறான அணுகுமுறை என்பதை தவெக அரசு உணர வேண்டும் என்றும், சமூகநீதியை பாதிக்கும் வகையிலான எந்தத் திட்டமும் இருந்தால் அதனை உடனடியாக கைவிட்டு, அரசின் நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ