Enter your Email Address to subscribe to our newsletters

பெரம்பலூர், 15 ஜூன் (ஹி.ச.)
பெரம்பலூர் துறையூர் சாலையில், அடைக்கம்பட்டி அருகே T.களத்தூர் பிரிவு சாலை பகுதியில் கண்டெய்னர் லாரி மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில், அடையாளம் தெரியாத மூன்று பேர் பரிதாபமாக உடல் நசுங்கி பலியாகினர்.
விபத்து பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பாடாலூர் போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினர் பொதுமக்கள் உதவியுடன் உபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி, உடல் நசுங்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கப்பட்டு, அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
இதுவரை உயிரிழந்தவர்களின் பெயர், ஊர் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் தெரியவில்லை. காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN