பெரம்பலூர் அருகே கார்-லாரி நேருக்கு நேர் மோதி விபத்து - 3 பேர் பலி
பெரம்பலூர், 15 ஜூன் (ஹி.ச.) பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூரை சேர்ந்த சங்கர் (37), அரியலூர் மாவட்டம் சன்னாசிநல்லூர் கிராமத்தை சேர்ந்த சக்தி (21), அரிசானந்தம் கிராமத்தை சேர்ந்த விஜய் (30) ஆகியோர் இன்று காலை காரில் துறையூரிலிருந்து பெரம்பலூர் நோக
சாலை விபத்து


பெரம்பலூர், 15 ஜூன் (ஹி.ச.)

பெரம்பலூர் மாவட்டத்தில்

பெரம்பலூரை சேர்ந்த சங்கர் (37), அரியலூர் மாவட்டம் சன்னாசிநல்லூர் கிராமத்தை சேர்ந்த சக்தி (21), அரிசானந்தம் கிராமத்தை சேர்ந்த விஜய் (30) ஆகியோர் இன்று காலை காரில் துறையூரிலிருந்து பெரம்பலூர் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தனர்.

அவர்களது கார், பெரம்பலூர்–துறையூர் சாலையில் டி.களத்தூர் அருகே வந்தபோது, பெரம்பலூரிலிருந்து துறையூர் நோக்கிச் சென்ற லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஊரக காவல் நிலைய போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்து தொடர்பாக தெலுங்கானாவைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ஜலீல் பாஷா சாய்கிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam