பெட்ரோல் பங்க் உரிமையாளர் கொலை வழக்கு - 6 ஆண்டுகளுக்குப் பின்னர் மகன் உட்பட 3 பேர் கைது
புதுச்சேரி, 15 ஜூன் (ஹி.ச.) பெட்ரோல் பங்க் உரிமையாளரான புருஷோத்தமன் 2020-ஆம் ஆண்டு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். அப்போது பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் போதிய துப்பு கிடைக்காததால் விசாரணை தேக்கமடைந்திருந்தது. பின்னர் இவ்வழக்கு சிபிசிஐ
பெட்ரோல் பங்க் உரிமையாளர் கொலை வழக்கு - 6 ஆண்டுகளுக்குப் பின்னர் மகன் உட்பட 3 பேர் கைது


புதுச்சேரி, 15 ஜூன் (ஹி.ச.)

பெட்ரோல் பங்க் உரிமையாளரான புருஷோத்தமன் 2020-ஆம் ஆண்டு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

அப்போது பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் போதிய துப்பு கிடைக்காததால் விசாரணை தேக்கமடைந்திருந்தது. பின்னர் இவ்வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது.

சிபிசிஐடி அதிகாரிகள் தொடர்ந்து நடத்திய தீவிர விசாரணை மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில், கொலைக்கான மூல காரணமாக செயல்பட்ட புருஷோத்தமனின் மகன் தனபிரவீன் இருப்பது தெரியவந்துள்ளது.

சொத்து தகராறு மற்றும் தொழில் முன்விரோதம் காரணமாக தந்தையை கொலை செய்ய தனபிரவீன் திட்டமிட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கொலைக்கு தனபிரவீனுக்கு உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர்கள் இருவரையும் சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மூவரிடமும் ரகசிய இடத்தில் வைத்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து முக்கிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆறு ஆண்டுகளாக துப்பு துலங்காமல் இருந்த வழக்கில் சிபிசிஐடி-யின் இந்த நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.

வழக்கில் மேலும் சிலர் சிக்க வாய்ப்புள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Hindusthan Samachar / vidya.b