ராமேஸ்வரம் நகராட்சி ஆணையருக்கு பிடிவாரண்ட்
ராமநாதபுரம், 15 ஜூன் (ஹி.ச.) கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி அன்று ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்ற திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரபாகர் என்பவரிடம், நகராட்சி சார்பில் ரூ.100 நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால் கொடுத்த ரசீதில் ஆணைய
Rameshwaram Municipal


ராமநாதபுரம், 15 ஜூன் (ஹி.ச.)

கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி அன்று ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்ற திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரபாகர் என்பவரிடம், நகராட்சி சார்பில் ரூ.100 நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால் கொடுத்த ரசீதில் ஆணையர் கையொப்பம் இல்லை, வசூலிப்பவர் கையொப்பம் இல்லை, GST எண் இல்லை. கேள்வி கேட்டபோது தேவையில்லாத வார்த்தைகளால் பேசியதால் மன உளைச்சல் அடைந்தார்.

நியாயம் கேட்டு திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் வழக்கறிஞர் பிரம்மா மூலம் வழக்கு தாக்கல் செய்தார்

வழக்கை விசாரித்த கூடுதல்ஆணைய தலைவர் பிறவி பெருமாள், உறுப்பினர் சண்முகப்பிரியா ஆகியோர் 05.08.2025 அன்று, மன உளைச்சலுக்கு ரூ.20,000 நஷ்டஈடு, வழக்கு செலவு ரூ.10,000 என மொத்தம் ரூ.30,000 வழங்க நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டனர்.

45 நாட்களில் தராவிட்டால் 9% வட்டியுடன் வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

ஆணையம் உத்தரவிட்டும் பணம் தராமல் அலட்சியம் காட்டிய ராமேஸ்வரம் நகராட்சி ஆணையருக்கு எதிராக வழக்கறிஞர் பிரபாகர் செயலாக்க மனு தாக்கல் செய்தார்.

இதை விசாரித்த தலைவர் ஒய். கிளாட்ஸ்டன் பிளஸ்ட் தாகூர், உறுப்பினர் எம். கனகசபாபதி ஆகியோர் நகராட்சி ஆணையருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

Hindusthan Samachar / ANANDHAN