தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டைகள் வழங்க நடவடிக்கை - 46 ஆயிரம் அட்டைகள் அச்சிட்டு தயார்
சென்னை, 15 ஜூன் (ஹி.ச.) தமிழகம் முழுவதும் புதிய ரேஷன் அட்டை கோரி பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில், முதற்கட்டமாக 46 ஆயிரம் புதிய ரேஷன் அட்டைகள் அச்சிட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக உணவுப்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி
Rasion


சென்னை, 15 ஜூன் (ஹி.ச.)

தமிழகம் முழுவதும் புதிய ரேஷன் அட்டை கோரி பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில், முதற்கட்டமாக 46 ஆயிரம் புதிய ரேஷன் அட்டைகள் அச்சிட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக உணவுப்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதல் மாநிலம் முழுவதும் 2 லட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புதிய ரேஷன் அட்டை கோரி விண்ணப்பித்துள்ளனர்.

அவற்றின் பரிசீலனை பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தகுதி உறுதி செய்யப்பட்ட பயனாளிகளுக்கு முதற்கட்டமாக 46 ஆயிரம் ரேஷன் அட்டைகள் வழங்கப்பட உள்ளன.

புதிய ரேஷன் அட்டைகள் விநியோகத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, அடுத்த சில நாட்களுக்குள் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கும் பணி தொடங்கப்படும் என கூறப்படுகிறது.

மேலும், மீதமுள்ள விண்ணப்பங்களும் கட்டங்களாக ஆய்வு செய்யப்பட்டு, தகுதியான அனைவருக்கும் படிப்படியாக புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படும் என்று உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / P YUVARAJ