Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 15 ஜூன் (ஹி.ச.)
அண்ணா ஹசாரே எனப் பரவலாக அறியப்படும் கிசான் பாபுராவ் ஹசாரே, இந்தியாவின் மிக முக்கியமான சமூக ஆர்வலர் மற்றும் ஊழல் எதிர்ப்பு போராட்டக்காரர் ஆவார்.
சமூக ஆர்வலரான கிசான் பாபுராவ் ஹசாரே எனப்படும் அண்ணா ஹசாரே அவர்கள், 1937ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள பிங்கார் என்னும் இடத்தில் பிறந்தார்.
காந்திய கொள்கைகளைப் பின்பற்றி, வன்முறையற்ற அறப்போராட்டங்கள் மற்றும் உண்ணாவிரதங்கள் மூலம் இந்திய அரசியலிலும் சமூகத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்.
மாதிரி கிராமம் (ராலேகான் சித்தி):
ராணுவப் பணி ஓய்வுக்குப் பின், மகாராஷ்டிராவின் வறட்சியான ராலேகான் சித்தி கிராமத்தை நீர்மேலாண்மை, மதுவிலக்கு மற்றும் தீண்டாமை ஒழிப்பு மூலம் இந்தியாவின் முன்மாதிரி கிராமமாக மாற்றிக் காட்டினார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI):
மகாராஷ்டிர மாநிலத்தில் வலுவான தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட இவரது தொடர் போராட்டங்களே முக்கியக் காரணமாக அமைந்தன.
இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் (2011):
டெல்லி ஜந்தர் மந்தர் மற்றும் ராம்லீலா மைதானத்தில் வலுவான ஊழல் எதிர்ப்புச் சட்டமான 'ஜன லோக்பால் மசோதா' கொண்டு வரக் கோரி வரலாற்றுச் சிறப்புமிக்க உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார்.
இந்த இயக்கம் நாடு முழுவதும் பெரும் மக்கள் எழுச்சியை ஏற்படுத்தியது.
சமீபத்திய கோரிக்கைகள்:
மகாராஷ்டிராவில் லோகாயுக்தா சட்டத்தை முழுமையாக அமல்படுத்தக் கோரி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி மற்றும் வினோபா பாவேயின் வாழ்க்கை வரலாறுகளை படித்த பிறகு ஏழைகள் மேம்பாட்டை தனது வாழ்நாள் நோக்கமாகக் கொண்டார்.
இவர் பத்ம பூஷண், பத்மஸ்ரீ, மஹாவீர் விருது, சர்வதேச ஒருமைப்பாட்டு விருது, சிட் கில் நினைவு விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார்.
Hindusthan Samachar / Durai.J