முதலமைச்சர் தனிப்பிரிவு புகார் பெட்டி அகற்றம் - பழைய நடைமுறை மீண்டும் அமல்
சென்னை, 15 ஜூன் (ஹி.ச) சென்னை தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள முதலமைச்சரின் தனிப்பிரிவிற்குத் தினந்தோறும் தங்களது குறைகளை நிவர்த்தி செய்யக் கோரி மனுக்களை அளிக்க வரும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், கூட்ட நெ
முதலமைச்சர் தனிப்பிரிவு புகார் பெட்டி அகற்றம் - பழைய நடைமுறை மீண்டும் அமல்


சென்னை, 15 ஜூன் (ஹி.ச)

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள முதலமைச்சரின் தனிப்பிரிவிற்குத் தினந்தோறும் தங்களது குறைகளை நிவர்த்தி செய்யக் கோரி மனுக்களை அளிக்க வரும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களைச் சமர்ப்பிக்கவும் ஏதுவாக தலைமைச் செயலக வெளி வளாக நுழைவாயில் பகுதியிலேயே ஒரு பிரத்யேக புகார் மனுப் பெட்டி வைக்கப்பட்டிருந்தது.

தற்போது அந்த பெட்டி முழுமையாக நீக்கப்பட்டு, பழைய நடைமுறையே மீண்டும் அமலுக்கு வந்துள்ளது.

இதன்படி, பொதுமக்கள் இனி தலைமைச் செயலகத்திற்குள் நேரடியாக வந்து முதலமைச்சரின் தனிப்பிரிவில் தங்களது கோரிக்கை மனுக்கள் மற்றும் புகார்களை அளிக்கலாம்.

கடந்த காலங்களில் நடைமுறையில் இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

முன்பு, பாதுகாப்பு காரணங்களுக்காக அனைவரும் தலைமைச் செயலகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.

அந்த நடைமுறை தற்போது மாற்றப்பட்டு, பொதுமக்கள் நேரடியாக தனிப்பிரிவை அணுகி மனு அளிக்கும் முறை மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த மாற்றத்தின் மூலம் பொதுமக்கள் தங்கள் குறைகளை உரிய அதிகாரிகளிடம் நேரடியாக தெரிவிக்க முடியும் என்றும், மனுக்களின் மீதான நடவடிக்கை விரைவுபடுத்தப்படும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Hindusthan Samachar / vidya.b