டாஸ்மாக் கடைகளில் கூடுதல் வசூல் - 20 நாட்களில் 200 பணியாளர்கள் சஸ்பெண்ட்
சென்னை, 15 ஜூன் (ஹி.ச.) டாஸ்மாக் கடைகளில் மதுபான பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட ரூ.10 கூடுதலாக வசூலிக்கும் பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கக் கூடாது என டாஸ்மாக் நிர்வாகம் ஏ
Tasmac


சென்னை, 15 ஜூன் (ஹி.ச.)

டாஸ்மாக் கடைகளில் மதுபான பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட ரூ.10 கூடுதலாக வசூலிக்கும் பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கக் கூடாது என டாஸ்மாக் நிர்வாகம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை மீறி செயல்படும் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன.

இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், கடந்த 20 நாட்களில் மட்டும் 200 பணியாளர்கள் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், மதுபான பாட்டில்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ