திருவள்ளூர் சிறுமி கொலை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
திருவள்ளூர், 15 ஜூன் (ஹி.ச.) திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, பின்னர் கொலை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியளிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர்
இபிஎஸ்


திருவள்ளூர், 15 ஜூன் (ஹி.ச.)

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, பின்னர் கொலை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியளிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர்,

தமிழகத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், காவல்துறையின் செயல்பாடுகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட சிறப்பு அமைப்புகளின் செயல்திறன் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.

முதலமைச்சர் அறிவித்த பல்வேறு நடவடிக்கைகள் நடைமுறையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என விமர்சித்துள்ள எடப்பாடி பழனிசாமி, குழந்தை பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் உடனடியாக கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பில் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும், அரசியல் விளம்பரங்களை விட மக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P