Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர், 15 ஜூன் (ஹி.ச.)
திருவள்ளூர் மாவட்டம்
பூவிருந்தவல்லி பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளி தம்பதியின் 7 வயது மகள், அங்குள்ள அரசு பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி, அழுதபடி வீட்டிற்கு திரும்பியுள்ளார். சந்தேகமடைந்த பெற்றோர் விசாரித்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் சிறுமியை அருகிலுள்ள சுடுகாட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், தனியார் கார் ஓட்டுநரான சரவணனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையின் அடிப்படையில் சரவணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், புகார் அளிக்கப்பட்ட பிறகும் மகளிர் காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், மகளிர் காவல் ஆய்வாளர் பிரேமா தலைமையில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam