Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 ஜூன் (ஹி.ச.)
தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) கட்சியின் மாநில பொதுச்செயலாளரும், முக்கிய நிர்வாகியுமான மு.யுவராஜா, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
.தற்போதைய சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 25 ஆண்டுகளாக கட்சிக்காக தன்னுடைய நேரத்தையும் உழைப்பையும் அர்ப்பணித்து பணியாற்றியதாகவும், அரசியல் பயணத்தின் தொடக்கம் முதல் நல்ல தலைவராகவும் வழிகாட்டியாகவும் ஜி.கே. வாசன் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருமுறை பணியாற்றவும், தமாகா மாநில பொதுச்செயலாளராக செயல்படவும் வாய்ப்பளித்ததற்கும், மூன்று முறை சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட நம்பிக்கை வைத்ததற்கும் கட்சித் தலைமை மற்றும் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
கட்சியை விட்டு விலகுகிறேன், ஆனால் நன்றியையும், மரியாதையையும், விசுவாசத்தையும் அல்ல என்று தனது கடிதத்தில் யுவராஜா உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P