டிராக்டர் விபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிவாரணம்
சென்னை, 15 ஜூன் (ஹி.ச.) இராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் அருகே கடத்தலில் ஈடுபட்ட டிராக்டரை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர் எம். மகேஷ்குமார் குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சம் நிவாரண நிதி வழங்க தமிழ்
Jj


Hb


சென்னை, 15 ஜூன் (ஹி.ச.)

இராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் அருகே கடத்தலில் ஈடுபட்ட டிராக்டரை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர் எம். மகேஷ்குமார் குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சம் நிவாரண நிதி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

தேவிப்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்று அதிகாலை கடத்தலில் ஈடுபட்ட டிராக்டரை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

அந்த டிராக்டரை காவல் நிலையத்திற்கு தலைமைக் காவலர் எம். மகேஷ்குமார் ஓட்டி வந்தபோது, இராமநாதபுரம் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நாகர்கோவிலில் இருந்து வேளாங்கண்ணி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து டிராக்டரின் பின்புறம் மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த தலைமைக் காவலர் எம். மகேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரது உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும், குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு எனக் குறிப்பிட்ட முதலமைச்சர், உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்ததுடன், அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ரூ.30 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ