அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம் - சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
சென்னை, 16 ஜூன் (ஹி.ச.) அதிமுகவைச் சேர்ந்த நான்கு முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்த விவகாரத்தில் குதிரைப் பேரம் நடந்ததாக சந்தேகம் தெரிவித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. திர
ADMK Head Quaters


சென்னை, 16 ஜூன் (ஹி.ச.)

அதிமுகவைச் சேர்ந்த நான்கு முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்த விவகாரத்தில் குதிரைப் பேரம் நடந்ததாக சந்தேகம் தெரிவித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில்,

சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் தொடர்ந்த இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, முறைகேடுகள் நடந்ததாக கூறுவதற்கு என்ன ஆதாரங்கள் உள்ளன என்று கேள்வி எழுப்பியது.

மேலும், ஆதாரங்கள் இன்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்தது.

இதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு, தனி நபராக ஆதாரங்களை சேகரிக்க இயலாத சூழல் இருப்பதால் தான் சிபிஐ விசாரணை கோரப்படுவதாக விளக்கம் அளித்தது.

Hindusthan Samachar / P YUVARAJ