Enter your Email Address to subscribe to our newsletters

சிங்கப்பூர், 16 ஜூன் (ஹி.ச.)
சிங்கப்பூரில் நடைபெற்ற செமிகண்டக்டர்
“செமிகான் எகோசிஸ்டம்” ரவுண்ட் டேபிள் மாநாட்டில் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு
கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர்,
உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு ஆந்திரப் பிரதேசத்திற்கு வந்து 30 நாட்களுக்குள் மாநிலத்தில் உள்ள முதலீட்டு வாய்ப்புகளை நேரில் பார்வையிடுமாறு அழைப்பு விடுத்தார்.
ஆந்திரப் பிரதேசம் முதலீடுகளுக்கு மிகச் சிறந்த மற்றும் பாதுகாப்பான இடமாக உள்ளது என்றும், “ஸ்பீட் ஆஃப் டூயிங் பிசினஸ்” கொள்கையின் கீழ் தொழிற்சாலைகள் அமைப்பதற்கான அனுமதிகள் விரைவாக வழங்கப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.
மேலும், ராயலசீமா பகுதியில் விரைவில் செமிகண்டக்டர் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்தார்.
அந்த பகுதி எதிர்காலத்தில் பாதுகாப்பு, ஏரோஸ்பேஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆட்டோமொபைல் துறைகளுக்கான முக்கிய தொழில் மையமாக வளர்ச்சி பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் GlobalFoundries, NXP Semiconductors உள்ளிட்ட பல்வேறு உலகத் தரமான செமிகண்டக்டர் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். ஆந்திரப் பிரதேசத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை அவர்கள் ஆர்வத்துடன் கவனித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தை செமிகண்டக்டர் துறையின் முக்கிய உலக மையமாக உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA