கட்சியை வலுப்படுத்த பவன் கல்யாண் தலைமையில் 14 பேர் கொண்ட குழு அமைப்பு
அமராவதி , 16 ஜூன் (ஹி.ச.) ஜனசேனா கட்சியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், கட்சித் தலைவர் மற்றும் ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் புதிய முடிவை எடுத்துள்ளார். இது குறித்து தனது அறிக்கையில் அவர் கூறுகையில் : கட்சியில் புதிய உறுப்பினர்
A


அமராவதி , 16 ஜூன் (ஹி.ச.)

ஜனசேனா கட்சியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், கட்சித் தலைவர் மற்றும் ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் புதிய முடிவை எடுத்துள்ளார்.

இது குறித்து தனது அறிக்கையில் அவர் கூறுகையில் :

கட்சியில் புதிய உறுப்பினர் சேர்க்கை நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க 14 பேர் கொண்ட “ஜாயினிங்ஸ் கமிட்டி” அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவின் முக்கிய நோக்கம் கல்வியறிவு பெற்றவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் நடுநிலையிலுள்ளவர்களை ஜனசேனா கட்சியில் இணைப்பதாகும். மேலும், மாநிலம் முழுவதும் நடைபெறும் உறுப்பினர் சேர்க்கை நடவடிக்கைகளை கண்காணித்து வழிகாட்டுவதும் இந்தக் குழுவின் பொறுப்பாகும்.

இந்தக் குழுவில் எம்.எல்.ஏக்கள் போலிசெட்டி ஸ்ரீனிவாஸ், வம்சி கிருஷ்ணா ஸ்ரீனிவாஸ், பந்தம் நானாஜி, எம்.பி லிங்கமனேனி ரமேஷ், முன்னாள் அமைச்சர் பாலினேனி ஸ்ரீனிவாச ரெட்டி, முன்னாள் எம்.எல்.ஏக்கள் கிலாரி ரோஷையா, சாமினேனி உதயபானு உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது,

டெல்லி பயணத்தை முடித்த பின், பவன் கல்யாண் இந்தக் குழு உறுப்பினர்களுடன் தனிப்பட்ட ஆலோசனை நடத்த உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அப்போது உறுப்பினர் சேர்க்கை நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்து தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட உள்ளன.

இதே மாதிரியான “ஜாயினிங்ஸ் கமிட்டி”யை தெலங்கானாவிலும் விரைவில் அமைக்க ஜனசேனா திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA