சட்டமன்றத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும்? – எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்வர் விஜய் தலைமையில் தீவிர பயிற்சி
சென்னை, 16 ஜூன் (ஹி.ச.) தமிழக சட்டமன்றத்தின் புதிய உறுப்பினர்களுக்காக, முதல்வர் விஜய் தலைமையில் சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. முதன் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அதிக அளவில் இருப்பதால், சட்டமன்ற நடைமுறைகள், விதிமுறைகள்
விஜய்


சென்னை, 16 ஜூன் (ஹி.ச.)

தமிழக சட்டமன்றத்தின் புதிய உறுப்பினர்களுக்காக, முதல்வர் விஜய் தலைமையில் சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.

முதன் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அதிக அளவில் இருப்பதால், சட்டமன்ற நடைமுறைகள், விதிமுறைகள் மற்றும் உறுப்பினர்களின் பொறுப்புகள் குறித்து விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தப் பயிற்சியில், சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தை எவ்வாறு பயன்படுத்துவது, கவன ஈர்ப்பு தீர்மானங்களை கொண்டு வருவது, மானியக் கோரிக்கைகள் மற்றும் சட்ட மசோதாக்கள் மீதான விவாதங்களில் பங்கேற்பது, தொகுதி மக்களின் பிரச்சினைகளை அவையில் முன்வைப்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விளக்கப்பட்டு வருகிறது.

மேலும், சட்டமன்ற மரபுகள், உறுப்பினர்களின் உரிமைகள் மற்றும் கடமைகள், அவை ஒழுங்கை கடைப்பிடிக்கும் விதிமுறைகள் தொடர்பாகவும் அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர்.

புதிய அரசின் முதல் சட்டமன்ற கூட்டத் தொடரில் உறுப்பினர்கள் திறம்பட செயல்பட வேண்டும் என்ற நோக்கில் இந்தப் பயிற்சி நடைபெற்று வருகிறது.

ஆட்சிக் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் இதில் பங்கேற்று வருகின்றனர்.

சட்டமன்றத்தில் மக்களின் பிரச்சினைகளை முறையாக எடுத்துரைப்பது, அரசுத் துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது, தொகுதி மேம்பாட்டு திட்டங்களை கண்காணிப்பது போன்ற நடைமுறை அம்சங்கள் குறித்தும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

புதிய சட்டமன்றத்தில் முதல் முறையாக தேர்வான உறுப்பினர்கள் அதிகம் இருப்பதால், அவர்களின் செயல்திறனை மேம்படுத்தும் முக்கிய முயற்சியாக இந்தப் பயிற்சி முகாம் கருதப்படுகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam