10 ஆம் வகுப்பு துணைத்தேர்விற்கு விண்ணப்பிக்க இன்று ஒரு நாள் கால அவகாசம் நீட்டிப்பு - அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
சென்னை, 16 ஜூன் (ஹி.ச.) தமிழக அரசு பாடத்திட்டத்தின் கீழ் 10 ஆம் வகுப்பிற்கான துணைத்தேர்வு ஜூலை மாதம் நடைபெற உள்ள நிலையில் இத்தேர்வுக்கு மாணவர்கள், தனித்தேர்வர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு கால அவகாசமும்
10 ஆம் வகுப்பு துணைத்தேர்விற்கு விண்ணப்பிக்க இன்று ஒரு நாள் கால அவகாசம் நீட்டிப்பு - அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு


சென்னை, 16 ஜூன் (ஹி.ச.)

தமிழக அரசு பாடத்திட்டத்தின் கீழ் 10 ஆம் வகுப்பிற்கான துணைத்தேர்வு ஜூலை மாதம் நடைபெற உள்ள நிலையில் இத்தேர்வுக்கு மாணவர்கள், தனித்தேர்வர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்துள்ளனர்.

விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு கால அவகாசமும் வழங்கப்பட்டது.

தற்போது மீண்டும் நீட்டிக்கப்பட்டு சிறப்பு தட்கல் முறையில் மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகங்கள் வாயிலாக இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் படித்து தோல்வியடைந்தவர்கள், வருகைபுரியாதவர்கள், தனித்தேர்வர்கள் அந்தந்த மாவட்ட அரசுத்தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் நேரில் சென்று தேர்வு கட்டணத்துடன் கூடுதலாக ரூ.500 சிறப்பு கட்டணமாக செலுத்தி ஆன்லைனில் தக்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களை விண்ணப்பதாரர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பிற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) அலுவலகங்களில் விண்ணப்பித்திட மீண்டும் இன்று ஒரு நாள் மட்டும் வாய்ப்பு வழங்கப்படுவதாக அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b