Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர், 16 ஜூன் (ஹி.ச.)
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் அருகே நேற்று முன்தினம்(ஜூன் 14) இரவு மூன்று வயது வடமாநில பெண் குழந்தை ஒன்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு புதரில் வீசப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற போலீசார் குழந்தையை மீட்டு முதல் கட்ட சிகிச்சைக்காக கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்தது.தொடர்ந்து பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் சிறுமியின் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டு பொன்னேரி இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.
குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததாக வடமாநிலத்தை சேர்ந்த பிபின் மஞ்சி (19 வயது ) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரை திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
அரைமணி நேரத்திற்கு மேல் நடந்த விசாரணைக்கு பிறகு, பிபின் மஞ்சுவை வரும் 29ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உமா மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.
உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு 8 லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து அரசு சார்பில் சிறுமியின் குடும்பத்தினருக்கு 8 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி பிபின் மஞ்சி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். போக்சோ, கொலை உள்ளிட்ட 4க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க போக்சோ சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத்தர போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மூன்று வயது குழந்தைக்கு எதிரான இந்த பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைச் சம்பவம் கும்மிடிப்பூண்டி பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b