Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை , 16 ஜூன் (ஹி.ச.)
நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த இளைஞர் கவின், சாதி மறுப்பு காதல் காரணமாக கடந்த ஆண்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்.
இந்த ஆணவக் கொலை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணையின் அடிப்படையில் சுர்ஜித், அவரது தந்தை மற்றும் தாயார் கிருஷ்ணகுமாரி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் நெல்லை கீழமை நீதிமன்றத்தில் சிபிசிஐடி தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான சுர்ஜித்தின் தாயார் கிருஷ்ணகுமாரி, தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிமன்றம், அடுத்த கட்ட விசாரணையை வரும் ஜூன் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தையே உலுக்கிய இந்த ஆணவப் படுகொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவரின் தாயாரே குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b