Enter your Email Address to subscribe to our newsletters

கொல்கத்தா, 16 ஜூன் (ஹி.ச.)
12-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஜூன் 21-ஆம் தேதி மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெறும் பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று தலைமையேற்க உள்ளார்.
ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
கொல்கத்தாவின் ரெட் ரோடு பகுதியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் யோகாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் சிறப்பு யோகா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
யோகா மூலம் உடல் மற்றும் மனநலத்தை மேம்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நிகழ்ச்சிகளின் நோக்கமாகும்.
இந்த நிலையில், கொல்கத்தாவில் நடைபெறும் மத்திய நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பது தொடர்பான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
Hindusthan Samachar / VINOTH KUMAR P