கும்மிடிப்பூண்டி பாலியல் வன்கொடுமை வழக்கு - உயிரிழந்த 3 வயது சிறுமியின் பெற்றோருக்கு ரூ.8 லட்சம் நிவாரணம் வழங்கிய அமைச்சர் குமார்
திருவள்ளூர், 16 ஜூன் (ஹி.ச.) திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நிலையில், சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று காலை 8 மணி அளவில் ச
அமைச்சர் குமார்


திருவள்ளூர், 16 ஜூன் (ஹி.ச.)

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நிலையில், சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சிகிச்சை பலனின்றி நேற்று காலை 8 மணி அளவில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், பிரேத பரிசோதனைக்குப் பிறகு சிறுமியின் உடல் பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

இதையடுத்து, சிறுமியின் உடல் முறையாக புதைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

இந்நிலையில், இன்று கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வந்த ஐ.டி. துறை அமைச்சர் குமார், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா ஆகியோர் முன்னிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் ரூ.8 லட்சம் நிவாரணத் தொகைக்கான உத்தரவை சிறுமியின் பெற்றோரிடம் அமைச்சர் குமார் வழங்கினார்.

Hindusthan Samachar / GOKILA arumugam