மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து சரிவு - நீர்வரத்து குறைந்ததால் இருப்பு 41.21 டிஎம்சியாக பதிவானது
மேட்டூர், 16 ஜூன் (ஹி.ச.) சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று 79.34 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று 79.25 அடியாக சரிந்துள்ளது. இதனால் அணையின் மொத்த நீர் இருப்பு 41.21 டிஎம்சி அடியாக உள்ளது.
மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து சரிவு - நீர்வரத்து குறைந்ததால் இருப்பு 41.21 டிஎம்சியாக பதிவு


மேட்டூர், 16 ஜூன் (ஹி.ச.)

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

நேற்று 79.34 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று 79.25 அடியாக சரிந்துள்ளது. இதனால் அணையின் மொத்த நீர் இருப்பு 41.21 டிஎம்சி அடியாக உள்ளது.

அணைக்கு வரும் நீர்வரத்தும் கணிசமாக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் வினாடிக்கு 251 கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது வினாடிக்கு 193 கன அடியாக சரிந்துள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைந்ததும், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததும் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1000 கன அடி நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

நீர்வரத்தை விட வெளியேற்றம் அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் தினசரி சரிந்து வருகிறது.

தற்போதைய நிலவரப்படி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. குடிநீர் தேவை மட்டுமே பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

நீர்மட்டம் தொடர்ந்து சரிந்தால் டெல்டா பாசனத்துக்கும், குடிநீர் தேவைக்கும் சிக்கல் ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b