நீட் மறுத்தேர்வு வினாத்தாள்கள் ஹெலிகாப்டர் மூலம் விநியோகம் - திருநெல்வேலியில் வெற்றிகரமாக ஒத்திகை
திருநெல்வேலி, 16 ஜூன் (ஹி.ச.) நீட் மறுத்தேர்வுக்கான வினாத்தாள்களை பாதுகாப்பாகவும், விரைவாகவும் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லும் நோக்கில் ஹெலிகாப்டர் மூலம் விநியோகிக்க தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது. வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளை மு
NEET re-exam question papers distributed via helicopter


திருநெல்வேலி, 16 ஜூன் (ஹி.ச.)

நீட் மறுத்தேர்வுக்கான வினாத்தாள்களை பாதுகாப்பாகவும், விரைவாகவும் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லும் நோக்கில் ஹெலிகாப்டர் மூலம் விநியோகிக்க தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளை முற்றிலும் தடுக்கும் வகையில் இந்த புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக, டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு கொண்டு வரப்படும் நீட் மறுத்தேர்வு வினாத்தாள்கள், அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் திருநெல்வேலிக்கு எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான ஒத்திகை நிகழ்வு இன்று திருநெல்வேலி ஆயுதப்படை மைதானத்தில் நடத்தப்பட்டது.

ஒத்திகையின் போது, ராணுவ ஹெலிகாப்டர் ஆயுதப்படை மைதானத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டு, வினாத்தாள் பெட்டிகளை கையாளும் நடைமுறைகள் சோதிக்கப்பட்டன.

தேர்வு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, கடைசி நேரத்தில் மட்டுமே வினாத்தாள்கள் ஹெலிகாப்டர் மூலம் நேரடியாக தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஏற்பாடு மூலம் வினாத்தாள்களை சாலை வழியாக நீண்ட நேரம் எடுத்துச் செல்வதால் ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தவிர்க்கப்படும் என்றும், தேர்வின் நம்பகத்தன்மை மேலும் உறுதிப்படுத்தப்படும் என்றும் தேர்வுத்துறை வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

மதுரை-நெல்லை இடையேயான இந்த ஹெலிகாப்டர் விநியோக முறை, மாநிலத்தில் முதல் முறையாக செயல்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b