NEET மறு தேர்வை முன்னிட்டு இந்தியாவில் டெலிகிராமுக்கு தற்காலிக கட்டுப்பாடு
புதுடெல்லி, 16 ஜூன் (ஹி.ச.) நீட் (UG) 2026 மறு தேர்வை முன்னிட்டு, இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கான அணுகலை தற்காலிகமாக கட்டுப்படுத்த மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. தேசிய தேர்வு முகமை (NTA) பரிந்துரையின்பேரில்
டெலிகிராம்


புதுடெல்லி, 16 ஜூன் (ஹி.ச.)

நீட் (UG) 2026 மறு தேர்வை முன்னிட்டு, இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கான அணுகலை தற்காலிகமாக கட்டுப்படுத்த மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய தேர்வு முகமை (NTA) பரிந்துரையின்பேரில், தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-ன் பிரிவு 69A-ன் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஜூன் 22, 2026 வரை, அதாவது NEET மறு தேர்வு நடைபெறும் நாள் மற்றும் அதனைத் தொடர்ந்து சில நாட்கள் வரை டெலிகிராம் தளத்திற்கான அணுகல் இந்தியாவில் கட்டுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டெலிகிராமில் ஏற்கனவே பதிவிடப்பட்ட செய்திகளை பின்னர் திருத்தும் (Message Editing) வசதியையும் ஜூன் 30, 2026 வரை இந்தியாவில் முடக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

தேசிய அளவிலான தேர்வுகளில் வினாத்தாள் கசிவு நடந்ததாக போலியான ஆதாரங்களை உருவாக்குவதற்காக, ஏற்கனவே வெளியிடப்பட்ட செய்திகளை பின்னர் திருத்தும் வசதி தவறாக பயன்படுத்தப்பட்டதாக NTA தெரிவித்துள்ளது.

இதனைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் கூறியுள்ளன.

NEET தேர்வின் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை பாதுகாக்கும் நோக்கில் இந்த கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக NTA விளக்கம் அளித்துள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P