12 நாட்களுக்குப் பிறகு மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி
நெல்லை, 16 ஜூன் (ஹி.ச.) நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை குறைந்ததால் மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் சீரானது. இதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் இன்று காலையிலிருந்து குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர். நெல்லை மாவட்ட
Manimuthar Falls


நெல்லை, 16 ஜூன் (ஹி.ச.)

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை குறைந்ததால் மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் சீரானது.

இதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் இன்று காலையிலிருந்து குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி, நாலு மூக்கு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பலத்த மழை காரணமாக பாபநாசம் மணிமுத்தாறு சேர்வலாறு ஆகிய அணைகளுக்கு நீர் வரத்தும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் 12வது நாளாக நேற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தண்ணீரின் வேகமும் மிக அதிகமாக இருக்கிறது இதனால் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு 12 நாட்களாக தடை விதிக்கப்பட்டது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை படிப்படியாக குறைந்த பிறகு மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது.

தொடர்ந்து 12 நாட்களாக அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது

Hindusthan Samachar / ANANDHAN