நூற்றுக்கும் மேற்பட்ட கோத்தர் பழங்குடியின பெண்கள் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
நீலகிரி, 16 ஜூன் (ஹி.ச.) நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள கோக்கால் கிராமத்தை சுற்றி கல்லுண்டி, கக்கஞ்சி நகர், கோக்கால் பஜார், கன்னேரிமுக்கு, கொட்லைன், செலக்கல், தேவாலா எஸ்டேட் என மொத்தம் 7 கிராமங்களில் சுமார் 2000 பேர் வசித்து வருகின்றனர். இதில்
Nilgiris Collector Office


நீலகிரி, 16 ஜூன் (ஹி.ச.)

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள கோக்கால் கிராமத்தை சுற்றி கல்லுண்டி, கக்கஞ்சி நகர், கோக்கால் பஜார், கன்னேரிமுக்கு, கொட்லைன், செலக்கல், தேவாலா எஸ்டேட் என மொத்தம் 7 கிராமங்களில் சுமார் 2000 பேர் வசித்து வருகின்றனர்.

இதில் கோக்கால் கிராமத்தில் மட்டும் கோத்தர் பழங்குடியினத்தை சேர்ந்த சுமார் 100 குடும்பங்கள் உள்ளனர்.

அப்பகுதி மக்களுக்காக உதகையிலிருந்து ஒரு அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக அந்த பேருந்து ஒவ்வொரு முறையும் கோத்தர் பழங்குடியின மக்களின் கோக்கால் கிராமம் வரை சென்று திரும்பி வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அப்பகுதியில் உள்ள பிற கிராம மக்கள் கோக்கால் கிராமத்திற்கு சென்று அங்கிருந்து அரசு பேருந்து ஏறுகின்றனர்.

இதற்கு கோத்தர் பழங்குடி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தங்களது கிராமத்திற்கு பிற கிராம மக்கள் வந்து அரசு பேருந்து ஏற எதிர்ப்பு தெரிவித்தவுடன் பிற கிராம மக்கள் தங்களது கிராமத்திற்கு வராமல் கோக்கால் சந்திப்பு பகுதியில் பேருந்தில் ஏறுமாறு கூறினர்.

இதற்கு பிற கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தங்களுக்கு தனியாக அரசு பேருந்து இயக்குமாறு கோரிக்கை மனு அளித்தனர்.

அது குறித்து அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ள நிலையில் கோக்கல் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கோத்தர் பழங்குடியின பெண்கள் இன்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து முற்றுகையிட்டனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த உதகை வட்டாட்சியர் பழங்குடியின பெண்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

அப்போது கோத்தர் பழங்குடியின பெண்கள் தங்களது கிராமத்திற்கு பிற கிராம மக்கள் வந்து அரசு பேருந்தில் ஏறுவதால் நெரிசல் ஏற்படுவது உடன் தங்களுக்கு அமர சீட் கிடைப்பதில்லை என்றும் கலாச்சாரத்துடன் வாழ்ந்து வரும் தங்களுக்கு கலாச்சார பாதிப்பு ஏற்படுவதாகவும் பிற கிராம மக்கள் தங்களைப் பற்றி தவறான புகார் அளித்துள்ளதாகவும் கூறினர்.

Hindusthan Samachar / ANANDHAN