மழைக்கால நிவாரணத் தொகையை ரூ.10,000 ஆக உயர்த்த வேண்டும் - தூத்துக்குடி உப்பளத் தொழிலாளர்கள் கோரிக்கை
தூத்துக்குடி, 16 ஜூன் (ஹி.ச.) தூத்துக்குடி மாவட்ட உப்பளத் தொழிலாளர்கள், மழைக்கால நிவாரண உதவித் தொகையை ரூ.5,000-லிருந்து ரூ.10,000 ஆக உயர்த்தித் தருமாறு மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மழைக்காலத்தில் வாழ்வாதாரத்தைத் தக்கவைப்பதில் ஏற்பட
மழைக்கால நிவாரணத் தொகையை ரூ.10,000 ஆக உயர்த்த வேண்டும் - தூத்துக்குடி உப்பளத் தொழிலாளர்கள் கோரிக்கை


தூத்துக்குடி, 16 ஜூன் (ஹி.ச.)

தூத்துக்குடி மாவட்ட உப்பளத் தொழிலாளர்கள், மழைக்கால நிவாரண உதவித் தொகையை ரூ.5,000-லிருந்து ரூ.10,000 ஆக உயர்த்தித் தருமாறு மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மழைக்காலத்தில் வாழ்வாதாரத்தைத் தக்கவைப்பதில் ஏற்படும் சிரமங்களைச் சுட்டிக்காட்டி இந்தக் கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

தற்போது வழங்கப்படும் ரூ.5,000 நிவாரணம் மூன்று மாத குடும்பச் செலவுகளுக்குப் போதுமானதாக இல்லை என்று உப்பளத் தொழிலாளிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் கூறுகையில்,

நாங்கள் உப்பளங்களில் மிகவும் கடினமான சூழ்நிலையில் வேலை செய்கிறோம். தை மாதம் தொடங்கி பல மாதங்களுக்கு வேலை கிடைத்தாலும், மழைக்காலத்தில் எங்கள் வேலை முற்றிலும் பாதிக்கப்படுகிறது. அரசு வழங்கும் ரூ.5,000 மழைக்கால நிவாரண உதவி, மூன்று மாதங்களுக்கு குடும்பச் செலவுகளைச் சமாளிக்கப் போதாது. எனவே, நிவாரணத் தொகையை ரூ.10,000 ஆக உயர்த்த வேண்டும்.

தொழிலாளர்கள் சொந்த வீடு கட்டிக்கொள்ள வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்றும் காசி வலியுறுத்தினார்.

எங்களில் பலர் வாடகை வீடுகளில் வசிக்கிறோம். சொந்த வீடு கட்ட அரசின் ஆதரவு தேவை. எனவே எங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும்.

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துவிட்ட நிலையில், அரசு நிவாரணத் தொகையை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலமைச்சர் விஜய் தம்பி எங்கள் கோரிக்கையை பரிசீலித்து, மழைக்கால நிவாரண உதவியை உயர்த்தி தருவதாக உறுதியளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b