திருச்செந்தூர் கோயிலில் சிறுவியாபாரிகள் அகற்றப்படவில்லை - கோயில் நிர்வாகம் விளக்கம்
சென்னை, 16 ஜூன் (ஹி.ச.) திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் கிரி பிரகாரப் பகுதிகள், முறைவரிசைப் பகுதிகள் மற்றும் காத்திருப்போர் அறைப் பகுதிகளில் பக்தர்களின் நடமாட்டத்திற்கு இடையூறாக விற்பனை செய்து வந்த தலைச்சுமை வியாபாரிகள் மற்றும் ஆக
Thiru


Hj


சென்னை, 16 ஜூன் (ஹி.ச.)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் கிரி பிரகாரப் பகுதிகள், முறைவரிசைப் பகுதிகள் மற்றும் காத்திருப்போர் அறைப் பகுதிகளில் பக்தர்களின் நடமாட்டத்திற்கு இடையூறாக விற்பனை செய்து வந்த தலைச்சுமை வியாபாரிகள் மற்றும் ஆக்கிரமிப்பு செய்திருந்த வியாபாரிகளுக்கு மாற்று இடங்களில் வியாபாரம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நேற்று முற்பகலில் காவல்துறையினர் முன்னிலையில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்து, பக்தர்களுக்கு இடையூறு இல்லாத பகுதிகளுக்கு தாமாகவே இடம்பெயருமாறு மட்டுமே கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும், எந்தவித அகற்றும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சிறுவியாபாரிகளின் வியாபாரத்தை தடுக்கவோ அல்லது முடக்கவோ நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ