நூல் விலை 15 ரூபாய் குறைப்பு -திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி
திருப்பூர், 16 ஜூன் (ஹி.ச.) பருத்தி இறக்குமதிக்கான 11 சதவீத வரியை மத்திய அரசு தற்காலிகமாக ரத்து செய்த நிலையில் நூல் விலை 15 ரூபாய் குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பனியன் ஆடைகள் தயாரிப்பின் மிக முக்கிய மூலப் பொருளான நூல் விலை தொடர்ந்து உயர்ந
Thread


திருப்பூர், 16 ஜூன் (ஹி.ச.)

பருத்தி இறக்குமதிக்கான 11 சதவீத வரியை மத்திய அரசு தற்காலிகமாக ரத்து செய்த நிலையில் நூல் விலை 15 ரூபாய் குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பனியன் ஆடைகள் தயாரிப்பின் மிக முக்கிய மூலப் பொருளான நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் திருப்பூர் தொழில் துறையினர் பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

மத்திய அரசு பருத்தி மீதான இறக்குமதி வரி 11 சதவீத வரி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு 10 ரூபாய் குறைந்த நிலையில் மீண்டும் 15 ரூபாய் குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து மே மாதம் 16ம் தேதி வரை சுமார் 61 ரூபாய் வரை நூல் விலை உயர்த்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அதன்படி ஜூன் மாத துவக்கத்தில் கிலோவுக்கு 10 ரூபாய் விலை குறைத்தும், இன்று மீண்டும் கிலோவுக்கு 10 ரூபாய் குறைத்தும் நூற்பாலைகள் அறிவிப்பை வெளியிட்டுள்ளது, ஆடை உற்பத்தியாளர்களுக்கிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN