திருவண்ணாமலை நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
திருவண்ணாமலை, 16 ஜூன் (ஹி.ச.) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், மகிளா நீதிமன்றம், கூடுதல் மாவட்ட நீதிமன்றம், சார்பு நீதிமன்றம் போக்ஸோ நீதிமன்றம் என 1
Tiruvannamalai Court


திருவண்ணாமலை, 16 ஜூன் (ஹி.ச.)

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், மகிளா நீதிமன்றம், கூடுதல் மாவட்ட நீதிமன்றம், சார்பு நீதிமன்றம் போக்ஸோ நீதிமன்றம் என 16 நீதிமன்றங்கள் ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகின்றன.

மாவட்ட நீதிமன்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்கள் சரியாக 1.15 மணிக்கு நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டது.

தற்பொழுது மோப்பநாய் தென்றல் உதவியுடன் 10 க்கும் மேற்பட்ட வெடிகுண்டு செயலிழக்க வைக்கும் நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் மூலம தற்பொழுது நீதிமன்றத்தில் நீதிமன்ற வளாகம் முழுக்க, பொது மக்கள் காத்திருக்கக்கூடிய இடங்கள், நீதிபதி அமரும் இடங்கள் மற்றும் அறைகள், அலுவலக அறைகள், வழக்கறிஞர்கள் அமரக்கூடிய அறை என நீதிமன்றம் முழுக்க தற்பொழுது தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.

இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN