Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 16 ஜூன் (ஹி.ச.)
ஆன்மீக நகரமான திருவண்ணாமலையில் கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு வந்த தகவலின் அடிப்படையில் அதிகாலை முதலில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
மோப்ப நாய் பைரவா உதவியுடன் போலீசார் அதிரடி சோதனையில் 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
கடந்த திமுக ஆட்சியில் கஞ்சா விற்பனை செய்யப்பட்ட போது பெயர் அளவிலே வழக்கு பதிவு செய்யப்பட்டது, மேலும் ரயில்கள் மூலம் ஆந்திராவில் இருந்து திருவண்ணாமலைக்கு கஞ்சா கொண்டுவரப்படுவதாக பல அரசியல் கட்சி தலைவர்கள் பகிரங்கமாக தெரிவித்த நிலையிலும் கடந்த ஐந்தாண்டுகளாக அங்கொன்றும் இங்கொன்றும் பெயரளவில் வழக்கு பதிவு செய்து வந்த காவல்துறை ஒரு சிலர் மட்டுமே கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்புக்கு வந்த தமிழக வெற்றி கழகம் அனைத்து துறைகளிலும் அதிரடி காட்டி வரும் நிலையில் நகர ஆய்வாளர் முரளிதரன் தலைமையில் போலீசார் திடீரென திருவண்ணாமலை மாநகரில் உள்ள சமுத்திரம் காலனி பகுதியில் கஞ்சா புழக்கம் இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கஞ்சா, பான்மசாலா குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை கண்டறியும் துப்பறியும் மோப்பநாய் பைரவா கொண்டுவரப்பட்டு ஒரு வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சந்தேகத்தின் பேரில் அந்த வீட்டில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சோதனை போது சமுத்திரம் காலனி பகுதியில் ஒரு வீட்டில் ஒன்றை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து மூன்று பெண்களை கைது செய்தனர்.
இதே போல் திருவண்ணாமலை மாநகரில் உள்ள பாவாஜி நகர் பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை கண்டறிய போதை பொருட்களை கண்டறியும் துப்பறியும் மோப்பநாய் பைரவா பயன்படுத்தப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN