தமிழகத்தில் மின் கட்டணம் உயருமா? முதலமைச்சர் விஜய் முடிவு அறிவிப்பார் - அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமா
சென்னை, 16 ஜூன் (ஹி.ச.) தமிழகத்தில் மின் கட்டண உயர்வு தொடர்பாக முதலமைச்சர் விஜய் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் பரிசீலித்து இறுதி முடிவை அறிவிப்பார் என்று மின்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செ
நிர்மல்


சென்னை, 16 ஜூன் (ஹி.ச.)

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு தொடர்பாக முதலமைச்சர் விஜய் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் பரிசீலித்து இறுதி முடிவை அறிவிப்பார் என்று மின்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் அவர் அளித்த பேட்டியில்,

மின் கட்டண உயர்வு ஆண்டுதோறும் வழக்கமான ஒன்றாக மாற்றப்பட்டுள்ளதாகவும், திமுக ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஆண்டுதோறும் கட்டணத்தை உயர்த்தி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும், மின் கட்டண உயர்வை அரசே ஏற்கும் வாய்ப்பு குறித்தும் நிதித்துறை ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். திமுக அரசு ஆண்டுதோறும் 6 சதவீதம் வரை மின் கட்டணத்தை உயர்த்த ஒப்புதல் அளித்ததே தற்போதைய நிலைக்கு காரணம் என்றும் அவர் கூறினார்.

கடந்த ஆண்டு மின் கட்டண உயர்வு 3.16 சதவீதமாக இருந்த நிலையில், இந்த ஆண்டுக்கான மின் கட்டண திருத்தம் தொடர்பான உத்தரவை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இன்னும் வெளியிடவில்லை என்றும் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்தார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P