அரசு அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரி டிரைவர் கைது - மணல் லாரி பறிமுதல்
திருச்சி, 16 ஜூன் (ஹி.ச.) திருச்சி மாவட்டம், முசிறி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் முசிறி கிராம நிருவாக அலுவலர் பாண்டியன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது முசிறி முடக்கு சாலை பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக ஒரு லாரி வந்துள்ளது, லாரியை நிற
Prison


திருச்சி, 16 ஜூன் (ஹி.ச.)

திருச்சி மாவட்டம், முசிறி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் முசிறி கிராம நிருவாக அலுவலர் பாண்டியன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது முசிறி முடக்கு சாலை பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக ஒரு லாரி வந்துள்ளது, லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் லாரி முழுவதும் சுமார் மூன்று யூனிட் மதிக்கத்தக்க அரசு அனுமதி இல்லாமல் மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது.

ஓட்டுனர் மற்றும் மணல் லாரியுடன் முசிறி காவல் நிலையத்தில் ஒப்படைத்து முசிறி கிராம நிர்வாக அலுவலர் பாண்டியன் புகார் அளித்துள்ளார்.

தொடர்ந்து முசிறி உதவி ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்து ஓட்டுநரிடம் விசாரணையில் தர்மபுரி மாவட்டம், எருவம்பட்டியை சேர்ந்த இளங்கோ (50) கைது செய்தனர்.

விசாரணையில் கேரளா பகுதியிலிருந்து திருச்சிக்கு கொண்டு செல்வதாக ஓட்டுனர் கூறியதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து மணலுடன் லாரியை பறிமுதல் செய்து காவல் நிலைய பகுதியில் நிறுத்தி வைத்துள்ளனர்.

லாரி ஓட்டுநர் இளங்கோவை முசிறி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிபதி உத்தரவின் பெயரில் குளித்தலை கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

Hindusthan Samachar / ANANDHAN