அதிமுக எம்.எல்.ஏ விஜயபாஸ்கர் ராஜினாமா
சென்னை, 16 ஜூன் (ஹி.ச.) அதிமுக முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.வுமான சி. விஜயபாஸ்கர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்காக அவர் தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை நேரில் சந்தித்து
க


சென்னை, 16 ஜூன் (ஹி.ச.)

அதிமுக முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.வுமான சி. விஜயபாஸ்கர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதற்காக அவர் தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

ஏற்கனவே அதிமுகவைச் சேர்ந்த நான்கு எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்திருந்த நிலையில், தற்போது சி. விஜயபாஸ்கரும் தனது பதவியை துறந்துள்ளதால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து அதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் விலகி வரும் சூழலில், இந்த ராஜினாமா அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரான விஜயபாஸ்கர், கடந்த சில மாதங்களாக கட்சித் தலைமையுடன் கருத்து வேறுபாட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவர் எம்.எல்.ஏ. பதவியிலிருந்தும் விலகியிருப்பது அரசியல் களத்தில் பல்வேறு யூகங்களுக்கு

வழிவகுத்துள்ளது.

இதற்கிடையில், சி. விஜயபாஸ்கர் ஓரிரு நாட்களில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Hindusthan Samachar / VINOTH KUMAR P